/ தமிழ்மொழி / ஐந்திணை ஐம்பது மூலமும் வார்ப்புரையும்

₹ 125

பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் ஒன்றான ஐந்திணை ஐம்பதுக்கு எழுதப்பட்டுள்ள எளிய வார்ப்புரை நுால். செய்யுள்களின் பொருளை தெளிவாக்குவதுடன், சுவை குன்றாமல் விளக்கம் அளித்துள்ளது. புலவரின் எண்ண ஓட்டத்தை அழகுடன் தெளிவாக்கி உள்ளது. ஒவ்வொரு பாடலுக்கும் துறை விளக்கம், மறைந்து உள்ள உணர்வு மேலீட்டுச்சுவை, பாடல் களம், கவித்திறன் ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது. முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்கிற வரிசைப்படி வைக்கப்பட்டுள்ளது. முதலில் இடம், ஒழுக்கம் கூறி, பின் செய்யுள் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து துறையும், விளக்கமும் கூறப்பட்டுள்ளன. இறுதியில், பாடல் பற்றிய விளக்கம் கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் நுால்.–- முகில்குமரன்


புதிய வீடியோ