/ கட்டுரைகள் / இந்தியா புண்ணிய பூமியா? ஞான பூமியா? ஆன்மீக நாடா?
இந்தியா புண்ணிய பூமியா? ஞான பூமியா? ஆன்மீக நாடா?
சமகால அரசியல் குறித்து விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். அரசியல், பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்கிறது. சமகாலத்தில் அரசியலும், மதமும் இணைந்து செயல்படுவதை கவனிக்கச் சொல்கிறது. மதத்தை மையமாக்கி ஆட்சி செய்தால், மக்கள் பிரித்தாளப்படுவர் என எச்சரிக்கிறது. ஒரு மதத்தை துாக்கிப்பிடித்தால் ஏற்படும் விளைவுகளை கூறுகிறது. பிரிவினை ஏற்படுத்தும் அமைப்புகளை பட்டியலிட்டு செயல்பாடுகளை விவரிக்கிறது. கார்ப்பரேட் சாமியார்களின் சுயநலச் செயல்கள், மக்கள் ஏமாற்றப்படுவதை கூறி எச்சரிக்கிறது. அரசியல் இன்றி எதுவும் இல்லை என விமர்சன கண்ணோட்டத்தை முன் வைக்கும் நுால்.– டி.எஸ்.ராயன்