/ உளவியல் / இயல்கள் இசங்கள் நிஜங்கள்
இயல்கள் இசங்கள் நிஜங்கள்
இருபதாம் நுாற்றாண்டில் மலர்ந்த கலை இயக்கங்கள் குறித்த தகவல்கள் உடைய நுால். ஆழ்மன எண்ணங்கள், மேலார்ந்த உணர்வுகள், புற உலக உண்மைகள், பிரச்னைகளை எதிர்கொள்வதில் சவால்கள் குறித்து விவரிக்கிறது. சம்பிரதாயங்கள், சமூக கட்டமைப்பை பிரதிபலிக்கும் சிற்பம், ஓவியங்களை தக்க உதாரணங்கள் மற்றும் மேற்கோள்களுடன் காட்டுகிறது. ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் நவீனத்துவ கலாசாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளை விவரிக்கிறது. ஆதிகால வாதம், எதிர்கால வாதம், வண்ண இசை வாதம், சுழித்திறல் வாதம், கட்டமைப்பு வாதம், துாய்மை வாதம், கியூபிசம் போன்ற கலை இலக்கிய கோட்பாடுகள் தோன்றியது குறித்து விரிவான தகவல்கள் உள்ளன. படைப்பாற்றல் எல்லையை விரிவுபடுத்தும் நுால். – புலவர் சு.மதியழகன்




