/ மருத்துவம் / இயற்கை வைத்தியம்
இயற்கை வைத்தியம்
உடல்நல அறிவியலில் இந்தியர் பெற்றிருந்த அறிவை எடுத்துரைக்கும் நுால். நோய்களை சரி செய்ய, இயற்கை மருத்துவ முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. சித்த மருத்துவ சிறப்புகளை அறியத் தருகிறது. நஞ்சுள்ள தாவரங்களை, மருந்தாக்கப்படும் விந்தை தகவல்களும் உள்ளன.பொருந்தாத உணவு, சமநிலை உணவு, உண்ணாவிரதம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், ரத்தத்தைப் பற்றிய அறிமுகம், சுரப்பிகளை பேணும் முறைகள், கண், வயிற்றை காக்கும் நடைமுறைகள் தரப்பட்டுள்ளன. நலமுடன் வாழ வழி சொல்லும் நுால்.-– புலவர் சு.மதியழகன்