/ வாழ்க்கை வரலாறு / ஜெ.ஜெயலலிதா ஒப்பனை முதல் அரியணை வரை
ஜெ.ஜெயலலிதா ஒப்பனை முதல் அரியணை வரை
ஜெயலலிதா வாழ்வில் சுவையான நிகழ்வுகளை விவரிக்கும் நுால். பரதம், குச்சிப்புடி நடனங்களில் சிறந்து விளங்கியதை எடுத்துரைக்கிறது. நடிகர் சிவாஜி கணேசன் தலைமையில் அரங்கேற்றம் நிகழ்ந்ததும், பள்ளி பருவத்திலே திரைப்பட வாய்ப்பு கிடைத்து புகழின் உச்சத்திற்கு சென்றதும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்களுடன் வெற்றி படங்களை கொடுத்தது பற்றி கூறப்பட்டுள்ளது. முதல்வர் சிம்மாசனத்தில் அமர்ந்து வளர்ப்பு மகன் திருமணம், எதிர்கொண்ட வழக்குகள், சந்தித்த அரசியல் சூழ்ச்சிகளை விவரிக்கிறது. திருப்பங்கள் நிறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று நுால். – புலவர் சு.மதியழகன்




