/ வாழ்க்கை வரலாறு / ஜெய்ஹிந்த் செண்பகராமனின் வீர வரலாறு

₹ 275

இந்தியாவிற்கு வெளியே விடுதலைக்காக நடந்த போராட்டங்கள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டை மீறி இருந்தன. வெளிநாட்டிலிருந்து போராடியதில் குறிப்பிடத்தக்கவர் செண்பகராமன். ஜெய்ஹிந்த் என்ற வாசகத்தை முழக்கமாக முன்னெடுத்ததால் பெயருடன் இணைத்தே அழைக்கின்றனர். எம்டன் என்ற ஜெர்மனியப் போர்க் கப்பல் சீனாவில் இருந்து புறப்பட்டு, 1914ம் ஆண்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை, உயர் நீதிமன்றச் சுவரைத் தாக்கியது. அந்தக் கப்பலை எல்லாருக்கும் தெரியும்படியாக தாக்குதல் நடத்திய செண்பகராமனின் வீரத்தை அனைவரும் பாராட்டினர். அவரைப் பற்றிய அரிய தகவல்களை உள்ளடக்கிய புத்தகம் இது. எல்லா தகவல்களும் ஆதாரங்களுடன் தரப்பட்டுள்ளன. நம்பகத்தன்மை அதிகமாக உள்ளது.அவரது பிறப்பு முதல் மறைந்தது வரை நிகழ்வுகளையும், அதன் பின் அவரது மனைவி லட்சுமி பாயின் வாழ்க்கையையும் எடுத்துரைக்கிறது. – முகிலை ராசபாண்டியன்


முக்கிய வீடியோ