/ வாழ்க்கை வரலாறு / ஜவ்வாது மலைவாழ் மக்களின் பண்பாட்டுத் தளங்கள்
ஜவ்வாது மலைவாழ் மக்களின் பண்பாட்டுத் தளங்கள்
ஜவ்வாது மலைப் பகுதியில் மக்கள் வாழ்வில் உள்ள பழைய மரபுகள் பற்றி ஆராய்ந்து தெரிவிக்கும் நுால். பல்வேறு சுவாரசியங்களை தருகிறது. ஒன்பது இயல்களாக பகுத்து எழுதப்பட்டுள்ளது.முதலில் ஊர் பெயரில் உள்ள மரபு ஆராய்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பயன்படுத்தும் மூலிகை தாவரங்கள் குறித்த விபரமும் உள்ளது. வணங்கப்படும் தெய்வங்கள், வழிபாட்டு முறைகள் பற்றியும் விளக்கமான தகவல்களை கொண்டுள்ளது.மக்கள் புழங்கும் பொருட்கள் பற்றி விரிவான தகவல்கள் படங்களுடன் தரப்பட்டுள்ளன. மக்கள் வாழ்வில் பழம்பெருமையை அறிய உதவும் ஆய்வு நுால்.– மலர்