/ கட்டுரைகள் / ஜைன நூல்களை அறிவோம்
ஜைன நூல்களை அறிவோம்
பக்கம்: 248 இலக்கியங்கள், இலக்கண நூல்கள், நன்னூல்கள், தர்க்க நூல்கள், இசை நூல்கள், நாடக நூல்கள், காவிய நூல்கள், நிகண்டுகள், கணித நூல்கள், ஜோதிட நூல்கள், பிரபந்தங்கள் பற்பல அருந்தமிழ் நூல்களை செய்து அணிகலன்களாக, தமிழ் அன்னைக்கு அணிவித்தவர்கள் சமணர்கள்.இவற்றில் பல அழிந்துவிட்டன. இருந்த போதிலும், எஞ்சிய அணிகளிலும் பொலிவாக தோன்றுகிறாள் தமிழ் அன்னை.60 ஜைன நூல்களைப் பற்றி, கடந்த ஐந்து ஆண்டுகளாக முக்குடை இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல் .அறநெறிச்சாரம். நீலகேசி, நரிவிருத்தம், இனியவை நாற்பது, இன்னா நாற்பது, சூளாமணி, சிறுபஞ்சமூலம், யாப்பருங்காலக்காரியை, நேமிநாதம் போன்ற நூல்கள் சமணர்கள் தமிழுக்கு அளித்த கொடை என்பதை அறியும் போது வியப்படைகிறோம்.