காலமெல்லாம் வசந்தம்..
மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108. போன்: 25361039 (பக்கம்: 316; வாழ்வின் ஆனந்தத்தை ஒன்பது தலைப்புகளில் நீதியரசர் இந்நூலில் விளக்குகிறார். வக்கீலாக வாழ்வை துவங்கிய அவர் படிப்படியாக ஐகோர்ட் நீதிபதி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி, இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் என பொறுப்புடன் கடமையாற்றி சிறப்பாக விளக்கியிருக்கிறார்.தற்போது முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் பிரதிநிதியான அவர் "எவருடைய வாழ்வு பொதுப் பணிக்கானதோ, அவ்வாழ்வே பெருமையுடையது என்ற சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை பின்பற்றி வாழ்ந்தவர்.சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்று அவர் சிறுவனாக இருந்த போது விரும்பியதை ஏற்காத, அவரது பெரிய தந்தையார் ஏட்டால் அடித்ததையும் கூறி, அது வாழ்க்கைக்கு பயனுள்ளதாக அமைந்தது (பக்.31) என்று பதிவு செய்திருக்கிறார். தனக்கு தமிழ் மீதான ஆசை ஏற்பட்டதை, "இயல்பாகவே எனக்கு தமிழை தாய் ஊட்டினாள். எங்கள் செட்டி நாட்டு ஆச்சிமார்களின் தாலாட்டிற்கு இணையாக தமிழ் காவியம் எதுவும் இருக்க இயலாது என்கிறார். விருதுகள் ஒவ்வொன்றும் சமுதாய மேம்பாட்டுக்கு உழைக்கும் எண்ணத்தை வளர்க்கும் என்று கூறும் ஆசிரியர்; சட்டத்துறையில் செய்த சிறப்புகள், சிறந்த தீர்ப்புகள், சொற்பொழிவுகள் என்று நூலின் பல பகுதிகள் சிறப்பாக விளக்குகின்றன. அத்துடன் ஏராளமான வண்ணப்படங்களும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன. இறை நம்பிக்கையும், தலைமைப் பண்பும் இயல்பாகவே தன்னிடம் இருந்ததை சுட்டிக்காட்டும் நீதிபதியின் வெற்றிப் பயணம் சிறப்பாக அவரது எழுத்துக்களில் பதிவாகியிருக்கிறது. வாழ்வில் வளம் பெற விரும்புவோர் படித்து பயனடையலாம்.