/ ஜோதிடம் / கடலங்குடியின் உங்களுடைய அதிர்ஷ்டத்தை உயர்த்திக் கொள்ள உன்னத எண் கணிதம்
கடலங்குடியின் உங்களுடைய அதிர்ஷ்டத்தை உயர்த்திக் கொள்ள உன்னத எண் கணிதம்
கடங்குடி பப்ளிகேஷன்ஸ், தி.நகர், சென்னை - 17. (பக்கம்: 192 ) ஜோதிட நூல்கள். அதிலும் என் கணித நூல்கள் முன்பே, நிறைய வெளிவந்துள்ளன. விதியை மதியால் வென்ற அதிர்ஷ்டத்தை அறை கூவி அழைத்து, அதை உங்களுக்குச் சொந்தமாக்க அமோகமான வாழ்வளிக்கும் நியூமலாலஜி எண் கணிதம் இது. இதைப் பின்பற்றும் எவரும் அற்புதமான மிக்க அதிர்ஷ்டமான வாழ்வை வாழ முடியும். என்பது எண்கணித சாஸ்திரத்தின் தீர்ப்பு. மனிதா, ஓ மனிதா, எண் இயல், எண்களின் வேர்கள், எண்ணும் எழுத்தும், எண்கள் கிரகங்கள் தொடர்பு, விதி, எண் விதிப்பது என்ன, பெயர் எண்கள், என 20 அத்தியாயங்களில் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. என் கணிதத்தில் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் அவசியம் படித்து அதன்படி செயல்பட்டு பயன்பெற வேண்டிய சிறந்த நூல்.