/ வரலாறு / கடவுளராகும் கற்கால ஆயுதங்கள்
கடவுளராகும் கற்கால ஆயுதங்கள்
இயற்கையை உயிராகவும், மலையை தாயாகவும் நேசித்த தொல்குடிகளின் வாழ்வும் நிலமும் இன்று உலகமயமாக்கலின் பேரலையில் சிதைந்து வருகின்றன. தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை, அவர்களின் பண்பாடு, இயற்கையோடு ஒன்றிய உறவு, உழைப்பு, நம்பிக்கை ஆகியவற்றை இத்தொகுப்பு 26 கவிதைகளின் வழியாக பதிவு செய்கிறது. இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் ஒரு வாழ்க்கை ஆவணமாக வாசிக்கப்பட வேண்டும். மலை மக்களின் பசி, கல்விக்கான போராட்டம், நில உரிமை, வனச் சட்டங்களால் ஏற்பட்ட சிக்கல்கள், இயற்கை அழிவு போன்ற பல்வேறு சமூக உண்மைகள் கவிதையின் அழகியலோடு இணைந்து இந்நூலில் குரல் கொடுக்கின்றன. – சிவசு




