/ கவிதைகள் / கடவுளுக்குப் பொய்யென்று பெயர்

₹ 100

பகுத்தறிவு பற்றிய சிந்தனையை தரும் கவிதை நுால். தேனிலவின் போது நடந்த விபத்தில் மணமக்கள் பலியாகும் நிகழ்வை, ஜாதக பொருத்தம் பார்ப்பது பற்றிய நம்பிக்கை குறித்து கேள்வி யாக எழுப்புகிறது. சம்பாதிக்கும் மனைவியின் வங்கி அட்டையை கணவர் வைத்திருப்பதை கண்டிக்கிறது. கடன் வாங்கி வேண்டுதலை நிறைவேற்றுவதை, ‘வட்டிக் கடைக்காரன்’ கவிதை எச்சரிக்கை செய்கிறது. ஜாதி மறுப்பு திருமணத்துக்கு பின்னும் மணமகன் அதை தொடர்வதை சாடுகிறது. கல்விக்கு வித்திட்ட தலைவர்களை போற்றுகிறது. கண் பார்வை தந்தவருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை என, மூட நம்பிக்கை பரப்புவதை சாடுகிறது. நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க அறுவை சிகிச்சை போன்ற செயல்களுக்கு எதிரான நுால். – டி.எஸ்.ராயன்


சமீபத்திய செய்தி