/ கதைகள் / காதல் மட்டும் புரிவதில்லை
காதல் மட்டும் புரிவதில்லை
உன்னதமான காதலின் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல் நுால். காதல் சிலருக்கு வரம்; சிலருக்கு சாபம் என்பதை விளக்குகிறது. பிள்ளைகளின் மன உணர்வையும் எதிர்காலத்தையும் கருதாது ஜாதி, மதம் எனக் கூவிக்கொண்டு காதலை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோரை மையமாக உடையது. மகனுக்கு தன் தங்கையின் மகளை மணம் முடித்து வைக்க காத்திருக்கும் தந்தைக்கு ஏற்படும் அதிர்ச்சியை உரைக்கிறது. பெற்றோரின் எதிர்ப்பை எவ்வாறு பிள்ளைகள் சமாளித்தனர்; அந்த காதல் நிறைவேறியதா என்பதை விறுவிறுப்பு, திருப்பத்துடனும் விவரித்து இருக்கிறது. காதல் சுகமானது எனக்கூறும் நுால். – புலவர் சு.மதியழகன்




