/ மாணவருக்காக / கைப்பக்குவம்
கைப்பக்குவம்
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பார்வையை ஏற்படுத்தும் அறிவியல் பேரவை செயல்பாடுகளை பதிவு செய்துள்ள நுால். திட்டமிடல், பயிற்சியில் மாணவர் பங்களிப்பை விவரிக்கிறது. விஞ்ஞானியாக திட்டமிடுவது பற்றி விரிவான விளக்கங்கள் உள்ளன. அறிவியலை நோக்கிப் பயணிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும். இளம் விஞ்ஞானி விருது பெற்றவர்களும், ஆசிரியர்களும் இணைந்து செயல்படுவதை விளக்குகிறது. இளம் வயதில் அறிவியல் மீதான ஆர்வத்தை தகவமைத்துக் கொள்வதற்கான செயல் வடிவங்கள், கள ஆய்வு முறையை கிடைக்கச் செய்வதோடு, தேர்ந்த அறிஞர்களின் உதவியும் பெற்றுத் தருவதை குறிப்பிடுகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் தவிர்க்காமல் படிக்க வேண்டிய நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு