/ வாழ்க்கை வரலாறு / கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை – பாகம் 2

₹ 399

நடிகர் சிவாஜி கணேசன் பற்றி, நாம் நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்; படித்திருக்கிறோம். அவற்றையெல்லாம் தாண்டி, சிவாஜி கணேசன் பற்றி, இதுவரை தெரியாத, பல அரிய விஷயங்கள், இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. சிவாஜி கணேசனின் இன்னொரு பக்கத்தை அறிந்து கொள்ள வழிவகுக்கிறது இந்நூல்!சினிமா துறையாகட்டும், அரசியலாகட்டும்; சிவாஜி கணேசன் என்ற நடிகர் மீது சுமத்தப்பட்ட பல எதிர்மறை கருத்துக்கள், எதனால், யாரால் கற்பிக்கப்பட்டு, பரப்பப்பட்டன என்பதை அலசி ஆராய்ந்து, வெளிக் கொணர்ந்துள்ள கட்டுரையாசிரியரின் துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும்.ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும் போது சிவாஜி கணேசன் என்ற மாபெரும் கலைஞனை பற்றிய உண்மை நிலையை அறிந்து கொள்ள முடிகிறது.புத்தகத்தில் பக்கத்துக்கு பக்கம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காணக்கிடைக்காதவை. புத்தக வடிவமைப்பும், அச்சும் வெகு அருமை!– எஸ்.எஸ்.ஆதித்யா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை