/ தீபாவளி மலர் / கலைமகள் தீபாவளி மலர் 2025
கலைமகள் தீபாவளி மலர் 2025
வாழ்க்கை பயணத்தை சிறப்பாக்க உதவும் மகான்களின் அருளுரையுடன் மலர்ந்துள்ளது கலைமகள் தீபாவளி மலர். வரலாறு, சினிமா, சிறுகதை, கவிதை, சிறப்பு கட்டுரைகள் என சரவெடியாக தொகுக்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர்களின் சிறு கதைகள் மலரில் ஏராளமாக இடம் பெற்றுள்ளன; ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையை அள்ளி தருகின்றன. பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் முக்கியத்துவம் பெற்று ஜொலிக்கின்றன. வரலாற்றை முன்னிலைப்படுத்தும் வகையில், மன்னர் கிருஷ்ண தேவராயர் ஆட்சி சிறப்பை கூறும், ‘விஜய நகரத்தின் பொற்காலம்’ கட்டுரை சுவாரசியம் மிக்க தகவல்களுடன் உள்ளது. படங்கள், அபூர்வ தகவல்களுடன் ‘ஹம்பி என்ற கிஷ்கிந்தா ஷேத்ரம்’ பயணக் கட்டுரை அபூர்வ செய்திகளை உடையது. இலக்கிய ஆக்கங்களும் இடம் பெற்றுள்ளன. இனிமையும், வண்ணங்களுமாக குலுங்கி மகிழ்விக்கிறது கலைமகள் தீபாவளி மலர். – நிகி