/ இலக்கியம் / காலந்தோறும் கண்ணதாசன்

₹ 150

புதுகைத் தென்றல், எண்: 24/3ஏ, திருநகர் முதல் தெரு, வடபழனி, சென்னை-26 (பக்கம்: 256) கண்ணதாசன் மறைந்து கால் நூற்றாண்டாகியும், இன்னும் அவர் நம்மை ஆட்டிப் படைக்கிறார். அவர் கருத்துக்கள் இன்னமும் வாழ்கின்றன என்ற கருத்தை கொண்ட ஆசிரியர், அதை எழுத்தோவியமாக்கியிருக்கிறார். சிலப்பதிகாரம் இந்திரா விழாவில் காணப்படும் பட்டிமண்டபத்தை "வசந்த மாளிகை சினிமாவில் வரும் "மதுக்கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன் என்று வித்தியாசமாக விளக்குகிறார். கண்ணதாசனின் முதல் பாடல் "கலங்காதிரு மனமே என்பதை சுட்டிக்காட்டி, அவர் எப்படி திரைத்துறையில் நுழைந்தார் என்பதை விளக்குகிறார். அவர் நம்பிக்கைமிக்கவர் என்பதை எழுத்தில் காட்டியவர். "வாசல் தேடி உலகம் - உன்னை வாழ்த்திப் பாட வேண்டும் என்று, அதற்கு ஆதாரமாக சுட்டி காட்டுகிறார். மனிதனை முழுவதுமாக அறிந்த கவிஞர் நம்முடன் தொடர்ந்து வாழ்கிறார் என்பதை, ஆசிரியர் தெளிவாக இந்நூலில் படம் பிடித்திருக்கிறார். நல்ல முயற்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை