/ இலக்கியம் / கலித்தொகை

₹ 150

முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை-40. (பக்கம்: 320) "கற்றறிந்தார் ஏற்றும் கலியொடு என, போற்றப்படுவது கலித்தொகை. இந்நூலுக்கு இதுவரை பல உரைகள் வந்திருந்தாலும், ஆசிரியர் சக்திதாசன், நூலின் சுவை குறையாதபடி, எளிய நடையில், அனைவருக்கும் புரியும்படி புதிய முறையில் விளக்கம் அளித்துள்ளார். அனைவருமே உரைநடையில் விளக்கம் எழுத, இந்நூலின் ஆசிரியரோ காலத்தின் கட்டாயம் அறிந்து, கதை வடிவில் விளக்கம் எழுதியுள்ளார். பாடலுக்கான விளக்கத்தையும், தற்போது பயன்படுத்தப்படும் சொற்களை பயன்படுத்தி, புதிய முறையில் சொல்லியிருக்கிறார். குறிப்பாக, தலைவன், தலைவிக்குள் நிகழும் உரையாடல்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு மட்டுமின்றி, படிக்கும் அனைவருக்குமே புரியும்படி எழுதியுள்ளது, நூலாசிரியரின் தனிச்சிறப்பு சிறப்பு.


புதிய வீடியோ