/ கதைகள் / கல்லடிப் பாலம்

₹ 120

படிப்பவரை புதுமையான தளத்தில் பயணித்து சிந்தனையை செலுத்த அழைத்துச்செல்லும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தந்தை – மகனுக்கு உள்ள அளவற்ற பாசத்தை வித்தியாசமான கோணத்தில் சொல்கிறது, ‘கல்லடிப் பாலம்’ கதை. உழைக்கும் பெண்கள் நிலையை உலுக்குவது போல், சிங்கிள் பேரண்ட் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது, ‘சாருவின் வீடு’ கதை. ஒவ்வொரு கதையும் அதன் அதன் வடிவில் அழகியல் பரிணாமத்தை காட்டுகின்றன. நாட்டின் ஒரு மூலையில் நடக்கும் முக்கிய சம்பவத்தை மையப்படுத்தியுள்ள, ‘மஞ்சரி சுடப் பட்டாள்’ கதை வித்தியாசமாக இருக்கிறது. கதை நகர்த்தலும், இழையோடும் நகைச்சுவையும் சிறப்பு சேர்க்கின்றன. சமூகத்தின் பல தளங்களில் பயணிக்கும் தனித்துவம் மிக்க கதைகளின் தொகுப்பு நுால். – ஊஞ்சல் பிரபு


சமீபத்திய செய்தி