/ சமையல் / கலோரி குறைவான உணவு வகைகள்!
கலோரி குறைவான உணவு வகைகள்!
ஆரோக்கிய வாழ்வுக்கு உகந்த உணவுகளை அறியத்தரும் நுால். எளிய முறையில் தயாரிக்க வழிகாட்டியாக உள்ளது.உணவில் கலோரியின் அளவு குறித்து தெளிவுபடுத்துகிறது. தொடர்ந்து, பல்வேறு வகையான உணவுகள் தயாரிப்பு பற்றி விளக்கப்பட்டுள்ளது. உணவு தயாரிக்க தேவைப்படும் பொருட்களும், தயாரிப்பு முறையும் எளிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அவசர வேளைகளில் துரிதமாக தயாரித்து உண்ணும் வகையில் ஏராளமாக உள்ளன. இஞ்சி சோடா, சீரகப் புளித்தண்ணி, புதினா லஸ்ஸி என சில நிமிடங்களில் தயாரிக்க ஏற்ற உணவு வகைகளும் உள்ளன. சுவை மிக்கதாகவும், ஆரோக்கியத்துக்கு குறைவு ஏற்படாத வகையிலுமான உணவு வகைகளே தரப்பட்டுள்ளது. ஆரோக்கிய வாழ்வுக்கு உகந்த உணவு தயாரிக்க கற்றுத்தரும் நுால்.– மதி