/ தமிழ்மொழி / கம்பன் அன்றும் என்றும்

₹ 230

பக்கம்: 304 நூலாசிரியர், பேராசிரியர் கு.ராமமூர்த்தி கம்ப ராமாயணத்தை நன்கு கற்றுணர்ந்து, அதில் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. இராவணனுடைய மகனான மேகநாதன் என்ற இந்திரஜித்தின் வீரத்தை, இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் போர்த் தளபதியாகத் திகழ்ந்த ஜெனரல் ரோமலின், வீர வாழ்வோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ள முறை, வியக்க வைக்கிறது. ராமன் நல்ல தலைவன் என்ற பகுதியில், ராமனிடம் எல்லா வகை நற்பண்புகளும் குடி கொண்டுள்ளன என்பதை அழகுற விளக்குகிறார். ஆங்காங்கே, கம்பனின் பாடல்களைப் பொருத்தமுறக் கூறும் விளக்கம் நன்று.மனித உறவுகள் மேம்படவும், மனித குலப் பண்பாடுகள் வளரவும், கம்ப ராமாயணப் பாத்திரங்கள் வாயிலாக, கம்பர் கூறும் கருத்துக்களும், அறிவுரைகளும் மக்களை நல்வழிப்படுத்தும் என்பதை ஆசிரியர் சிறப்பாகவிளக்கியுள்ளார்.ராமன் நல்ல தலைவன், கம்ப ராமாயணம் நல்ல காப்பியம். இக்கருத்தை விளக்கும் இந்த நூல் நல்ல நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை