/ கட்டுரைகள் / கம்பன் கலைக்களஞ்சியம்
கம்பன் கலைக்களஞ்சியம்
கம்பராமாயணத்தின் காவியச்சுவை மற்றும் படைப்பு திறனில் உள்ள சிறப்புகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். மகாகவி பாரதி முதல் தமிழ் அறிஞர்கள் எழுதிய, 133 படைப்புகள் இடம் பெற்றுள்ளன. சில ஆங்கில மொழியிலும் உள்ளன. வெளிநாட்டு அறிஞர்களின் பங்களிப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. கம்பனின் கவிதை தனித்திறன், கதையை விவரிப்பதில் உள்ள பாங்கு, சமூக பின்னணியுடன் கூறியுள்ள நயம், மொழியை கையாண்டுள்ள விதம் என பல கோணங்களில் உள்ளன. ராமாயண பாத்திரங்களில் உள்ள முக்கியத்துவம், அவை வெளிப்படுத்தும் அறக் கோட்பாடு, பிற நுால்களுடன் ஒற்றுமை என பல்துறை சார்ந்த விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. கம்பன் படைப்பின் உன்னதத்தை வெளிப்படுத்தும் நுால். – ராம்