/ கட்டுரைகள் / கம்பன் சில தரிசனங்கள்
கம்பன் சில தரிசனங்கள்
பக்கம்: 136, ராஜபாளையம் கம்பன் கழகத்தார் ஆண்டுதோறும், ஒரு நூல் வெளியிடும் வேள்வியைத் தவறாது செய்து வருகின்றனர். இந்த ஆண்டில், இந்நூலைக் கம்பன் அன்பர்களுக்கு அளித்துள்ளனர். அவர்கள் பணி மிகவும் பாராட்டத்தக்கதாகும்.இந்நூலாசிரியர் மு.ராமச்சந்திரன், நயத்தக்க நாகரிகத்துடன், தகுந்த சொல்லாட்சிகளுடன் நறுக்குத் தெறித்தது போல, நகைச்சுவை கலந்து, நூலை எழுதியிருப்பது, பேச்சில் மட்டுமல்ல எழுத்திலும், அப்படியே என்று நிலை நிறுத்துகிறார்.இந்நூலில், 10 கட்டுரைகள் உள்ளன. பத்தும், பத்து ரத்தினங்கள் எனலாம். நூல் பலமுறை படித்துப் படித்து, இன்புறத்தக்க வகையில் உள்ளது. அனைவரும் படித்து பயன் அடையலாம்.