/ கவிதைகள் / கம்பனின் தமிழமுது

₹ 300

கவிமணி, ‘கையில் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மது உண்டு’ என்று, கம்பனைப் போற்றினார். கலசம் நிறைந்த மது தரும் மயக்க இன்பத்தை, கம்பனின் இராம காதை கவி இன்பத்திலேயே பெற்று விடலாம் என்பதற்கு இந்தத் தமிழ் அமுது நுாலே சான்று.நவரச அழகை நாட்டியத்தில் காண்பது போல், ஒன்பது ரசமான கட்டுரைகளில், கம்பனின் பாட்டியல் சுவையை இந்நுால் பகிர்ந்து அளிக்கிறது.விட்டு விலகி இருந்த தமிழ் ஆர்வத்தை, பட்டிமன்றம் மூலம் தட்டி எழுப்பி, பாமரனுக்கும் தமிழ் எட்டுமாறு செய்தவர் சாலமன் பாப்பையா. ஒன்பது கம்பரசக் கட்டுரைகளுக்கு ஒன்பது பக்கங்களில் அவர் எழுதியுள்ள முன்னுரையே பட்டிமன்ற தீர்ப்பு போல நெஞ்சில் ஒட்டிக் கொள்கிறது.துளசியையும் கம்பனையும் ஒப்பிடும் முதல் கட்டுரையில் முத்திரை பதிக்கும் புதுப்புது செய்திகள் உள்ளன. வான்மீகியின், 24 ஆயிரம் சுலோகங்களையும், ஒரே முறை கேட்டு, பின் மனப்பாடமாய் ஒப்புவித்து ராம்போலோ, துளசிதாசராக மாறிய நிகழ்வு, படிப்போரை பரவசப்படுத்தும்.‘எந்த நாத்திகனாலும் கம்பனை எளிதில் ஒதுக்க முடியாது. எந்த ஆத்திகனாலும் பாவேந்தரைத் துறக்க முடியாது’ என்கிறது இரண்டாம் கட்டுரை.ஆத்திக, நாத்திக, மத எல்லைகள் கடந்தது கம்பனின் அமுதத் தமிழ் என்பதை இந்நுால் நிரூபிக்கிறது.கவிச்சக்ரவர்த்தியின் கற்பனைகள், கம்பனைப் பற்றிப் பேசி, எழுதி, நுால் வெளியிட்டு, 45 ஆண்டுகள் அ.ச.ஞா., செய்த அற்புதத் தொண்டுகள், சமய இலக்கியத்துச் சுந்தர காண்டம், திருவாசகம் போன்ற, தேனினும் இனிய கம்ப கனி ரசக் கட்டுரைகள் இந்நுாலில் உள்ளன. தமிழ் பசி உள்ளோர் கையில் இருக்க வேண்டிய நுால்.– முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை