/ கதைகள் / கம்பன் தொட்டதெல்லாம் பொன்

₹ 45

விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84ராம கதை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை. எத்தனை தடவை படித்தாலும் சலிப்பதில்லை.வால்மீகியில் ஆரம்பித்து பல்வேறு புலவர்கள் பல்வேறு மொழிகளில் ராம சரிதத்தில் மூழ்கி முத்துக் குளித்திருக்கிறார்கள். கம்பனும் அருணாசலக் கவிராயரும் ராமாயணக் காவியத்தை தேனினும் இனிய தமிழில் தோய்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.ராமனின் கதை ஒருபுறமிருக்க சம்பவங்களை கம்பன் வர்ணித்திருப்பது கொள்ளை அழகு. யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்று பாரதியார் பரவசப்பட்டு பாடும் அளவுக்கு கம்பனின் கவிநயமிக்க வர்ணனைகள் படிப்போரை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை.இந்நூலில் பக்கத்துக்குப் பக்கம் கம்பனைக் கொண்டாடுகிறார் கமலா சங்கரன். காலம் கடந்து நிற்கும் அந்தப் படைப்பாளனின் கற்பனைத் திறனையும் கவி உள்ளத்தையும், உவமைகள் பல சொல்லி காட்சிகளை விளக்கும் அவனுடைய உன்னதத் திறமைகளையும் அழகுத் தமிழில் எடுத்துரைக்கிறார்.காவியத்தால் கவியமுது படைத்த கம்பனின் படைப்பில், மனத்தை மயக்கும் பொன்னுக்கு இணையான காட்சி நயங்கள் எப்படி மிளிர்கின்றன என்ற ஜாலவித்தையை இந்த நூலில் நாம் காணலாம்.நூலாசிரியர் வாயிலாக கம்பனைப் படிக்கும்போது தமிழார்வம் கொண்ட எவரும் உள்ளம் பூரிப்பது நிச்சயம். அந்தக் கவிதை வரிகளில் பொதிந்திருக்கும் ஆழமான கருத்துகள் ஆச்சரியப்பட வைக்கும்.கதைப் போக்கிலும், காட்சி அமைப்பிலும் வால்மீகியிடமிருந்து கம்பன் வேறுபடும் சில இடங்களைக் காட்டி, கம்பனின் உள்ளக் கிடக்கையை நூலாசிரியர் உணர்த்தும் பாங்கு, இலக்கிய ரசிகர்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும்.


புதிய வீடியோ