/ இசை / கம்பனும் ஷேக்ஸ்பியரும்
கம்பனும் ஷேக்ஸ்பியரும்
ஒப்புமை நோக்கில் கம்பன் கருத்துகளை எடுத்துரைக்கும் நுால். கம்பனின் காப்பிய பாத்திரப் படைப்புகளை ஷேக்ஸ்பியரின் நாடக இலக்கியங்களின் பாத்திரப் படைப்புகளுடன் சீர்துாக்கிப் பார்க்கிறது. நீலமாலை என்ற இளம்பெண் பாத்திரம், ராமன் முறித்த வில்லை பற்றி சீதையிடம் சொல்வதாக மிகவும் நுட்பமாக உயிரூட்டி படைத்துள்ளதை ஆராய்ந்து கூறுகிறது. அதுபோல, ஷேக்ஸ்பியர் நாடகத்தில் ஆதாம் என்ற கிழவன் பாத்திரம் மனதில் பதிகிறது. இருவருமே பொருளுக்காக அன்றி கடமையாற்றியதால் காலத்தால் நிலைத்துள்ளதை எடுத்துரைக்கிறது. அந்த காலத்திலே தசை நசிவு தலைவிரித்து ஆடியது என்கிறது. காமத்திற்கு காலம் இல்லை என தெளிவாக்கும் நுால். – சீத்தலைச்சாத்தன்




