/ புத்தக மதிப்புரை / கம்பனும் கவிஞர் வாலியும்
கம்பனும் கவிஞர் வாலியும்
கம்பரின் கவித்திறனையும், வாலியின் படைப்புகளையும் ஒப்பிட்டு சிறப்புகளை எடுத்துக்கூறும் நுால். கம்பனின் ராமாயணப் பாடல்கள், செய்யுள்களாக இருப்பதால், ஒருவருக்கு பொருள் எளிதாக விளங்க வாய்ப்பில்லை. அதை போக்கும் வகையில், கவிஞர் வாலி புதுக்கவிதையில் கம்பராமாயணத்தை படைத்துள்ளதை எடுத்துக்கூறுகிறது. ராமாயணத்தில் முக்கிய பகுதிகளை பாடலுடன் குறிப்பிட்டு, புதுக்கவிதையில் உருவாக்கிய பாங்கை விவரிக்கிறது. முக்கிய பாடல்கள், பாத்திரங்கள், நிகழ்ச்சிகளை வாலி எப்படி புதுக்கவிதையில் அசத்தியுள்ளார் என விளக்கப்பட்டுள்ளது. அத்தனையும் எடுத்துக்காட்டுடன் தரப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தை தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு வழிகாட்டி நுால். – வி.ராமலிங்கம்




