/ கதைகள் / க.நா.சுப்ரமண்யனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

₹ 125

பக்கம்: 240 பரவலான வாசிப்பு அனுபவம் உள்ள, "க.நா.சு.,வுக்கு விமர்சகர் என்ற கவுரவம் உண்டு. சர்மாவின் உயில், பொய்த்தேவு போன்ற சிறந்த நாவல்கள் படைத்த பெருமை உண்டு. அவருடைய சிறுகதைப் படைப்புக்கு பெரிய வரவேற்பு இருந்ததாகச் சொல்ல முடியாது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில், தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள, சாகித்ய அகடமி பரிசு பெற்ற சா.கந்தசாமி, க.நா.சு.,வின், 24 சிறுகதைகளைத் தொகுத்து, இந்த நூலை தயாரித்திருக்கிறார். க.நா.சு.,வின் நூற்றாண்டை ஒட்டி சாகித்ய அகடமி வெளியிட்டுள்ள, இந்த சிறுகதைத் தொகுப்பு தமிழ் இலக்கிய அன்பர்களால் நிச்சயம் வரவேற்கப்படும் என்று நம்பலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை