/ கதைகள் / காணாமல் போன கணவனைத் தேடி...

₹ 85

கிராமத்தில் சிறிய குடும்பத்தில் ஏற்படும் மாறுதல்களை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல். ஹோட்டலை நம்பி வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக ஏற்படும் மாற்றங்களை முன் வைத்து கதை துவங்குகிறது. வியாபாரம் எப்படி பெருகியது? மற்ற ஹோட்டல்காரர்கள் ஆத்திரம் கொண்டது எல்லாம் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளது. அடுக்கடுக்காய் நடக்கிற சம்பவங்கள் பெரும் பிரச்னையை தோற்றுவிக்குமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அதை மெய்ப்பிக்கும் வண்ணம், பின்னால் அரங்கேறும் நிகழ்ச்சிகள், அதிர்வலையை ஏற்படுத்துகின்றன. கதை நாயகியின் உணர்வுகள் துல்லியமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மர்ம நாவல் போல் திருப்பங்களுடன் உள்ளது. உள்ளம் கவரும் காதல் காவியம். – டாக்டர் கார்முகிலோன்