/ கட்டுரைகள் / கனவுப் படிக்கட்டுகள்

₹ 200

வாழ்வை திட்டமிட்டு மேம்படுத்த வழிகாட்டும் கருத்துகளின் தொகுப்பு நுால். மொத்தம் 31 தலைப்புகளில் அமைந்துள்ளது. அச்சத்தை தைரியமாக எதிர்கொண்டால் சாதிக்க முடியும் என்கிறது. வாழ்க்கை சிக்கல்களுக்கு, வாசிப்பு வாயிலாக தீர்வு காண, வீட்டில் இருக்க வேண்டிய புத்தகங்களை பட்டியலிடுகிறது. நாட்களை மகிழ்ச்சியாக அமைக்க வழி காட்டுகிறது. கடவுளுக்கு எழுதிய கவிதைகள் ரசிப்புடன் சிந்திக்க வைக்கின்றன. நடப்பு அரசியல் சூழ்நிலையால் மக்கள் படும் வேதனைகளை சுட்டுகிறது. புன்னகைக்கு பணம் தேவையில்லை என்கிறது. அதில், கோர முகங்களையும் காட்டுகிறது. பிரிவுகளால் ஏற்படும் வலியை பிரதிபலிக்கிறது. நடப்பு நிகழ்வுகளை முன்வைத்து படைக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். – டி.எஸ்.ராயன்


முக்கிய வீடியோ