/ கதைகள் / கனவு துளிர்த்த கதை
கனவு துளிர்த்த கதை
சாமானிய மக்களின் வாழ்க்கை பின்னணியில் படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒரு குறுநாவலும் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு கதையும் மனித நேயம் வளர்ப்பதை மையக்கருத்தாக கொண்டுள்ளன. வாத்து மேய்க்கும் சிறுவனை மையக் கதாபாத்திரமாக உடைய, ‘வாத்து’ கதை, உணர்வை ததும்ப வைக்கிறது. ஏழைகளின் வாழ்க்கை போராட்டத்தை வெளிப்படுத்தும், ‘திருப்பதி சட்டை’ வித்தியாசமான சிந்தனையை தருகிறது. கிராமத்து சிறுவர்களின் ஆசையை, அதை நிறைவேற்ற துடிக்கும் நம்பிக்கையை, அது சிதைவதற்கான காரணத்தை முன்வைக்கிறது. வளரும் சமூக துாண்களான சிறுவர்கள் மீது, கதை ஆசிரியர் கொண்டுள்ள பற்றுதலை வெளிப்படுத்துகிறது. சமூக வளர்ச்சியில் அக்கறையுள்ள சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். – மதி




