/ கதைகள் / கனவுகள் (ஒரிய மொழி சிறுகதைகள்)

₹ 190

பக்கம்: 400 பேராசிரியர் சந்திரசேகர் ராத், ஒரிய மொழி எழுத்தாளர்களில் மிகச் சிறந்த ஒருவராகக் கருதப்படுபவர். அவர் ஒரு நாவலாசிரியரும், நல்ல கவிஞரும் கூட. அவர் எழுதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படும் 25 சிறுகதைகளை மொழி பெயர்த்து தொகுத்திருக்கின்றனர். இவற்றில் சாமுவேல் பாதிரியாரின் கதை, உள்ளத்தை உருக்குவதாய் இருக்கிறது. அனாதை ஆசிரமத்தை நிர்வகிக்க அவர் படும்பாடு, தியாகம் ஆகியவை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன.புத்தகத்தின் தலைப்பான கனவுகள் - சிறுகதையில் நல்ல விளையாட்டு திறமை இருந்தும், அவர்கள் ஏழைகள் என்பதால் எப்படி புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை படம் பிடிக்கிறது. மிகச் சில இடங்களில் தமிழாக்கம், இன்னும் சற்று எளிமையாக இருந்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. வேறு மாநில கதைகளையும் படித்து ரசிக்க விரும்புவோருக்கு, இது மிக நல்ல நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை