/ கதைகள் / கனவும் கண்டு மற

₹ 120

கனவையும் வாழ்வையும் இணைப்பதால் ஏற்படும் விபரீதங்களை விவரிக்கும் நாவல் நுால். உளவியல் கருத்துகள் சிந்திக்க வைக்கின்றன. தந்தையை இழந்து தாத்தாவிடம் வளர்கிறான் சிறுவன். அவன் விபத்தில் மரணித்ததாக தகவல் அறிந்து சோகத்தின் உச்சிக்கு செல்கிறார் தாத்தா. பேரன் கேட்ட வரைபடம் வாங்கித் தர முடியாததை எண்ணி புலம்புகிறார். அதை வாங்கி வராததால் சிறுவனை அடித்து கொன்று ஆசிரியை தப்புவதாக கதை நகர்கிறது. மனதை வருடி மர்மமாக இறந்தோர், ஆவியாக வந்து பேச ஆரம்பித்தால் போலீசுக்கு வேலையே இருக்காது என்ற கருத்தை முன் வைக்கிறது. ரயிலில் பயணிக்கும் போது, பிற பயணியர் சொல்வதை கேட்பதால் ஏற்படும் ஆபத்து குறித்தும் விளக்குகிறது. கனவு கண்டால் மறக்கச் சொல்லும் நாவல் நுால். – முனைவர் மா.கி.ரமணன்


சமீபத்திய செய்தி