/ கட்டுரைகள் / கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம் (பாகம் – 3)
கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம் (பாகம் – 3)
புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் அருமையான செய்திகள் அணிவகுத்து நிற்கின்றன. படித்தது, பார்த்தது, கேட்டது என்று பலதரப்பட்ட தகவல்களை கவனமாக பதிவிட்டுள்ளது. படித்தால், கணக்கற்ற விஷயங்கள் கவனத்திற்கு வருகின்றன. புதுமனை புகு விழாவிற்கு, சரியான வடமொழிச் சொல்லை அறிமுகம் செய்கிறது. திருவிடைமருதுார் பாவை விளக்கின் சோகக் கதை, நெஞ்சை நெகிழ வைக்கிறது. இசைத்தட்டுகளில் நாயின் படம் ஏன் உள்ளது என்பதை ருசிகரமாக பதிவு செய்துள்ளது.கல்லணையின் கதை கூறப்பட்டுள்ளது. பனாமா கால்வாய் பற்றிய செய்திகள் உள்ளன. அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.– டாக்டர் கார்முகிலோன்