/ கட்டுரைகள் / கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம் (பாகம் – 1)
கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம் (பாகம் – 1)
காணும் ஒவ்வொன்றிலிருந்தும், பாடம் கற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம் என வலியுறுத்தும் நுால். அந்த படிப்பு அனுபவமே பேரறிவைத் தரும்; அதுவே பண்டித நிலை என விளக்குகிறது. தகவல் களஞ்சியமாக உள்ளது. பிள்ளையார் சுழியின் சிறப்பை விளக்குகிறது. பழமொழியின் மெய்ப்பொருளை, ‘செப்பும் மொழியை செப்பம் செய்வோம்’ என்ற கட்டுரை அறிவுறுத்துகிறது. மூன்றே வரிகளில், நல்ல மனிதனை உருவாக்கும் கருத்து குவியல் உள்ளது. முதுமொழியான, ‘களவும் கத்தும் மற’ என்பது எப்படி உருக்குலைந்தது என விவரிக்கிறது. சின்ன சின்ன செய்திகள் நகைச்சுவையுடன் தரப்பட்டுள்ளன. முத்துகள் நிறைந்து மலர்ந்துள்ள கருத்துள்ள நுால். – டாக்டர் கார்முகிலோன்