/ வாழ்க்கை வரலாறு / கண்டேன்! கண்டறியாதன கண்டேன்!! கண்ணதாசம்

₹ 250

கவிஞர் கண்ணதாசனின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். காலந்தோறும் பேசப்படும் படைப்புகளை கொடுத்து, வாசகர்களை வசப்படுத்தும் ரசவாதக் கலையை அறிந்தவர் கண்ணதாசன் என கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையில் போராட்டங்களை சந்தித்தாலும், திரைப்படத்திற்கு முதலில், ‘கலங்காதிரு மனமே, உன் கனவுகள் நனவாகும் தினமே...’ என பாடல் எழுதியதை குறிப்பிடுகிறது.சங்க இலக்கியங்களை எளிமையாக்கிய பெருமை பெற்றவர் எனவும் கூறியுள்ளது. இதேபோல், அந்தாதி, தற்குறிப்பேற்ற அணி, சொற்பொருள் பின்வருநிலையணியில் பாடல்கள் எழுதியதும் காட்டப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நோய்வாய்ப்பட்டு இருந்த போது, ‘நலம் தானா’ என விசாரித்து எழுதிய பாடல் பற்றிய குறிப்பும் உள்ளது. கவிஞர் கண்ணதாசனின் பன்முகத்தை அறிய உதவும் நுால்.– முகில் குமரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை