/ ஆன்மிகம் / காஞ்சி மகா பெரியவரின் மகத்தான கருத்துகள்

₹ 150

காஞ்சி மகா பெரியவரின் அருமை, பெருமைகளை விளக்கும் நுால். முப்பது கட்டுரைகள் கொண்டுள்ளது.குழந்தைப் பருவம், குடும்ப விபரங்களை கூறுகிறது. கணபதி அக்ரஹாரம் என்ற ஊரில், வீடுகளில் விநாயக சதுர்த்தி பூஜை கொண்டாடுவதில்லை என்பதற்கு உரிய காரணத்தை உரைக்கிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 67 நாயன்மார் இருப்பதன் காரணம், பக்தர் கொடுத்த நவரத்தின மாலையை ஏற்க மறுத்தது என வியக்கும் செய்திகள் உள்ளன. பெண்ணை ஒருவரி மந்திரத்தில் நெறிப்படுத்தியது, தாவரங்களை துன்புறுத்த கூடாது என்று கூறியது, சிறுவன் பசிப் பிணி போக்கிய சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. வியப்பு நிறைந்த செய்திகள் கூறும் நுால்.– முனைவர் கலியன் சம்பத்து


முக்கிய வீடியோ