/ ஆன்மிகம் / காஞ்சி மகா பெரியவரின் மகத்தான கருத்துகள்
காஞ்சி மகா பெரியவரின் மகத்தான கருத்துகள்
காஞ்சி மடாதிபதி மகா பெரியவர் வாழ்வில் நடந்த 30 சம்பவங்களை கட்டுரைகளாக படங்களுடன் நெஞ்சில் பதியும் விதமாக படைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், கணபதி அக்ரஹாரத்தில் சதுர்த்தி பூசை கோவிலில் மட்டும் தான். அதற்கு காரணம் சொல்லுகிறார் பெரியவா. பாம்பன் சுவாமிகள் படம் மருத்துவமனையில் அகற்றப்பட்டது. மீண்டும் மாட்டப்பட்டு பூமாலை சூட்டியதும் அற்புதம் தானே!பத்ரம் புஷ்பம் என்ற கீதையின் ஸ்லோகம் வில்வத்திற்கு முதலிடமும், ரோஜா மாலைக்கு அடுத்த இடமும் கிடைத்ததை நடத்திக் காட்டிய பெருமை பேச வார்த்தை இல்லை. அமைச்சர் வேண்டுகோளின்படி வருண பகவானை வரவழைத்த நிகழ்வும் பூஜிக்க வைக்கிறது.– சீத்தலைச் சாத்தன்