/ இசை / கண்ணதாசன் கவிநுட்பம்
கண்ணதாசன் கவிநுட்பம்
கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்களில் உள்ள நுட்பத்தை விளக்கும் நுால். ஒவ்வொரு காதல் பாடலும் ஒவ் வொரு விதம்; தத்துவப் பாடல்கள் பலவிதம்; பக்திப் பாடல்கள் நெஞ்சை உருக்குவதை தெளிவாக விளக்கு கிறது. கவிதைகளில் கற்பனை, வர்ணனை, சொல்லாட்சி, மொழிநடை பலவிதமாக அமைந்துள்ளதை தெரிவிக்கிறது. மொழிநடையில் இருக்கும் ஜீவனை பறை சாற்றுகிறது. மான், அர்த்தம், வாழ நினைத்தால் வாழலாம், உரிமை, கண்ணதாசனும் தென்றலும், இலந்தைப் பழம் போன்ற தலைப்புகளில், பாடல்களில் உள்ள நுட்பத்தை விவரிக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களை எளிமைப்படுத்தி பாமரர் புரியும் வகையில் பாடியிருப்பதை காட்டுகிறது. கவிஞர் கண்ணதாசன் கவி நுட்பத்தை பல கோணங்களில் விவரிக்கும் நுால். – புலவர் ரா.நாராயணன்