/ கட்டுரைகள் / கண்ணே மணியே முத்தந்தா
கண்ணே மணியே முத்தந்தா
குழந்தைகளுக்கு கற்பித்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, எழுதப்பட்டுள்ள நுால். பயிற்றுவிப்பதில் உலக அளவில் மாற்றம் ஏற்படுத்திய மாண்டிசோரி கல்வி முறையை உருவாக்கியது பற்றி, 21 கட்டுரைகளில் கூறியுள்ளார். இந்த முறை பிறந்த வரலாறு அனுபவமாக விவரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கற்பதற்கான சூழலை உருவாக்குவதே ஆசிரியரின் வேலை என தெளிவாக்கப்பட்டுள்ளது. குழந்தை வளர்ச்சியும், அதனுாடே இயல்பான கற்கை நெறியும் வெளிப்பட்டுள்ளது. கற்பிக்கும் நுட்பம் மிளிர்ந்துள்ளது. கற்பிப்பதில் மாற்றம் காண விரும்புவோருக்கு உதவும் நுால்.