/ கவிதைகள் / கபிலர் வரலாறும் குறிஞ்சிக்கலி விருத்தமும்

₹ 125

கபிலர் வரலாற்றையும் குறிஞ்சிக்கலி பாடல்களின் கருத்தையும், எண்சீர் விருத்தப்பாவில் தந்துள்ள நுால். இரண்டு பெரும் அத்தியாயங்களையும், 40 தலைப்புகளையும் கொண்டுள்ளது.குறிஞ்சிக்கலியின் பாடல் கருத்தை உள்வாங்கி, கவிதை வடிவில் தரப்பட்டுள்ளது. அகப்பொருளுக்குரிய தலைவன், தலைவி, தோழி, நற்றாய் முதலிய பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. குறிஞ்சித் திணைக்குரிய முதல், கரு, உரிப் பொருட்கள், திணைக்குரிய ஒழுக்கம் மாறாமல், கபிலரைப் பெருமைப்படுத்தியுள்ளார்.குறிஞ்சிக்கலியில் ஊஞ்சல் வழியாக வந்த காதலை நயமுடன் நவில்கிறது. புலவர்கள் பலரை நாடிச் செல்வர் என்பதை, மலருக்கு மலர் தாவும் வண்டைப் போல பாவலர்கள் நாடாள்பவரை நாடிச் செல்வர் என கவிதையாக வடித்துள்ளார். எளிய சொற்களில் எல்லாருக்கும் புரியும் வண்ணம் அமைந்துள்ளது. கவிதையின்பம் சுவைக்க ஏற்ற நுால்.– பேராசிரியர் இரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை