கரிகால் சோழன்
பக்கம்: 352, இலங்கையை வென்று, 12,000 சிங்களரைக் கைதியாகக் கொண்டு வந்து, கல்லணை கட்டுவதற்கு அவர்களையும், மற்ற மன்னர்களையும் கரிகாலன் ஈடுபடுத்தினார். உலகப் பாரம்பரியச் சின்னமாகவும், தமிழக பொறியியல் தொழில்நுட்பத்தின் தொன்மை அடையாளம் ஆகவும், கல்லணை, 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதை இந்த நூல் வரலாற்று ஆதாரங்களுடன், பெருமையுடன் விளக்குகிறது.சோழ மன்னர்களில், "கரிகாலன் என்ற பெயரில் நால்வர் உள்ளனர். இவர்களில், முதலாம் கரிகால் பெருவளத்தானே கல்லணையை எழுப்பியவன் என்று, தக்க ஆதாரங்களுடன் நூல் நிறுவுகிறது.இமயத்தில் புலிச்சின்னம் பொறித்தும், இலங்கை மீது படையெடுத்து வென்று, 12,000 சிங்களரைக் கைதியாகத் தமிழகம் கொண்டு வந்தும், கல்லணை கட்டியும், காஞ்சிபுரம், பூம்புகார் நகரங்களை புதுப்பித்தும், "பட்டினப்பாலை, "பாட்டுடைத் தலைவனாகியும் கரிகாலன் பெருமை பெற்றுள்ளான்.நிலவியல், வரலாறு, கல்வெட்டு, இலக்கியம், நீர்ப்பாசனம் ஆகிய பல்வேறு துறை ஆதாரங்களுடன், படங்களுடன் இந்த நூல் கரிகாலன், கல்லணை இரண்டையும் நம் கண் முன் நிறுத்துகிறது.