/ பயண கட்டுரை / கற்பதுவும் கருதுவதும்
கற்பதுவும் கருதுவதும்
வாழ்க்கையில் நாம் பலதரப்பட்ட மனிதர்களுடன் பயணிக்க வேண்டிஇருக்கிறது. அப்படிப்பட்ட பயணங்களில் ஏற்படும் அனுபவங்கள், பல சமயங்களில் பாடங்களாகி விடுகின்றன. அவை, நம்மை வழி நடத்தும் ஆசிரியர்களாகவும் அமைந்து விடுகின்றன. மனதிலே ஏற்படும் தாக்கங்கள், அவற்றின் விளைவால் ஏற்படுகிற எண்ணக் கோர்வைகளை தொகுத்து, ‘கற்பதுவும் கருதுவதும்’ என தலைப்பிட்டு வழங்கியுள்ளார் வெங்கடரமணி. அவ்வப்போது பதிவு செய்து வைக்கும் எண்ணங்களை பழைய டைரிகளை போல நாம் நடந்து வந்த பாதையையும், இனி எடுக்க வேண்டிய முடிவுகளையும் சொல்லும் ஆசானாக பல தருணங்களில் இருந்துஇருப்பதை நன்கு விளக்கியுள்ள அற்புதமான நுால்.– இளங்கோவன்