/ கதைகள் / கதை கேளு... கதை கேளு...

₹ 55

விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச் சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைகளாகவும் செவிவழிக் கதைகளாகவும் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வந்த அத்தகைய கதைகள், அச்சு ஊடகம் வந்த பிறகு அரியணை ஏற வாய்ப்புப் பெற்றன.கிராமியப் பாடல்கள்கூட திரைப்படம் என்ற ஊடகத்தின் திரையில் ஒலி ஒளி பெற்று பிரகாசம் அடைந்து விடுகிறது. ஆனால், கிராமியக் கதைகளுக்கு அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு சொல்லும்படியாக இல்லை. அச்சு ஊடகம் மட்டுமே அந்த வாய்ப்பை தொடர்ந்து வழங்கிவருகிறது.இதுபோன்ற கிராமிய மணம் கமழும் கதைகளைக் கொண்டு, சமூகத்துக்கான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கதை கேளு... கதை கேளு... என்ற தலைப்பில் அவள் விகடன் இதழில் தொடராக எழுதிவந்தார் சிறுகுடி பார்வதி தண்டபாணி. அதாவது, அவர் சொல்லச் சொல்ல செவிவழியாகக் கேட்டு கிராமிய நடை மாறாது எழுத்தாக்கியிருக்கிறார் எழுத்தாளர் சுபா.சுபாவின் எழுத்து நடைக்கே உரிய எளிமையும் ஆழமும் இந்தக் கதைகளில் வாசகர்கள் பார்க்கமுடியும். தொடராக வந்தபோதே பெண்கள் மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்த கதைகளாக இவை அமைந்திருந்தன.அவள் விகடன் இதழில் வெளிவந்த இந்தக் கதைகளின் தொகுப்பே இந்த நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை