/ கதைகள் / காதல் என்பது எதுவரை...?
காதல் என்பது எதுவரை...?
குடும்பங்களில் நிலவும் குழப்பங்களை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால். கூட்டுக் குடும்பத்தில் குழந்தை மணம், மறுமணம், குடும்ப கட்டுப்பாடில்லாத குழந்தை எண்ணிக்கையை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ளது. தாயின் ஒழுக்கக் கேடால் மன அழுத்தத்திற்கு உள்ளான மகன் உண்மை அன்பிற்கு ஏங்கும் கதை தனித்து நிற்கிறது. கணவனின் பழைய காதலை டைரி மூலம் அறிந்த மனைவி, தானும் வேறொருவனோடு பழகி ஏமாந்தாள். மீண்டும் இருவரும் இணைந்தனரா, கணவனின் லட்சியம் நிறைவேறியதா என திருப்பங்களோடு, ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ கதை நகர்கிறது. கிராமத்து ஆசாமியின் அலப்பறை போன்ற நகைச்சுவை சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. பொழுது போக்க ஏற்ற கதை நுால். – புலவர் சு.மதியழகன்




