/ கதைகள் / காட்டிக் கொடுத்த களவுப் பை!
காட்டிக் கொடுத்த களவுப் பை!
திடுக்கிடும் திருப்பங்களுடன் அமைந்த நாவல் நுால்.அப்பாவி கிராம இளைஞனின், நகர வருகையோடு துவங்குகிறது கதை. தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு குப்பை கூடையில் சிலவற்றை கவனிக்கிறான். அச்சத்தில் ஆராய்ச்சி மனதுடன் அந்த செயல்களை எழுதி தொகுத்துப் பார்க்கிறான். கோர்வைப்படுத்திய போது தான், திட்டமிட்டு நடத்தப்பட்ட அராஜக செயல் புரிகிறது.தொழிலதிபர் வீட்டில் நடத்திய கொள்ளை, எத்தனை பேர் மனதை எப்படியெல்லாம் தடம் மாற வைக்கிறது என்பதை பரபரப்பு குன்றாமல் சொல்கிறது. திருட்டுத்தனம் செய்வதில், பாமரனும், படித்த அதிகாரியும் ஒன்று தான் என எண்ண வைக்கிறது. வயதிற்கும், அனுபவத்திற்கும் ஏற்ப புரிதலை ஏற்படுத்தும் நாவல் நுால்.– டாக்டர் கார்முகிலோன்




