/ இசை / கவிஞர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்கள் 6ம் தொகுதி

₹ 550

திரைப்பட பாடல் உலகில் துருவ நட்சத்திரமாய் துலங்கிய கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்களின் தொகுப்பு நுால். புதுமை, எளிமை, இனிமை நிறைந்த ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன.முதல் பாடல், 1951ல் வெளியான, தேவகி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது. பாடல் இடம் பெற்றுள்ள சினிமா, இசையமைத்தவர், பாடியவர் பற்றிய தகவலுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகாத படங்களில் இடம் பெற்றுள்ள பல பாடல்களும் உள்ளன. அவை ரசிகர்களால் அறியப்படாதவை.பழைய பாட்டு புத்தகங்கள், இசைத்தட்டு குறிப்புகளை பின்பற்றி, மிகவும் கவனமாக சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தேடி அலைந்து பல பகுதிகளில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளன. இதுவரை வெளிவராத பாடல்கள் மிகவும் சுவாரஸ்யம் தருகின்றன. சினிமா பாடல் ரசிகர்களுக்கு விருப்பமான நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை