/ அரசியல் / கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புப் பின்புலங்கள்

₹ 230

அப்துல் ரகுமான் கவிதைகள் மற்றும் கட்டுரைகளில் தனி மனிதன் குறித்த அவரது எண்ணங்களும், சமுதாயம் குறித்த அவரது நோக்கும், அரசியல் பற்றிய அவரது சிந்தனைகளும் அவரது படைப்புலகப் பார்வையை எவ்வாறு காட்டு கின்றன என்பது இந்த ஆய்வின் குறிக்கோள்.இயற்கை பின்புலம்: மலரின் அந்த அற்ப ஆயுள் தான், அதன் அழகை நீ அதிகமாக ரசிப்பதற்கு காரணமாகிறது என்கிறார்.ஒரு வாரம், ஒரு மாதம் என்ற கணக்கில் பூக்கள் இருப்பின், அதன் அழகு அவ்வளவாகப் போற்றப்படாது. அதனால் தான், அதற்கு அற்ப ஆயுள் என்கிறார் கவிஞர். பூவை இறைவனாகக் கருதி, ‘உன்னையே பறித்து உன்னை அர்ச்சித்தேனே’ என்கிறார்.இந்நுாலில் சிறப்பான பல தகவல்கள் உள்ளன.– எஸ்.குரு.


புதிய வீடியோ