/ வாழ்க்கை வரலாறு / கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள்

₹ 350

பக்கம்: 560 ஆடுவதும், ஓடுவதும், அனைவரையும் சாடுவதும், தரங்கெட்ட சேட்டைகளை நாடுவதுமே, இன்று நகைச்சுவை என்று சினிமாவில் ஆகிவிட்டது. பிறரைப் புண்படுத்தி, ஏமாற்றி, சிரிக்க வைக்க படாதபாடுபடும் இன்றைய திரையுலகம், கற்றுக் கொள்ள வேண்டிய பாடநூலாக, இந்த "கலைவாணர் நூல் அருமையாக உருவாகியுள்ளது.சீர்திருத்தமும், விவேகமும் நிறைந்த அவரது ஒவ்வொரு யதார்த்த வசனமும் சிரிக்க வைத்ததுடன், சிந்திக்கவும் வைத்து சமூகத்தை சீர்திருத்தம் செய்துள்ளது என்பதை, 214 தலைப்புகளில், 560 பக்கங்களில் இந்த நூல் ஆவணமாகக் காட்டுகிறது.லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி, 30 மாதங்கள் சிறையில் இருந்தும் உள்ளம் தளராமல், மீண்டும் வந்து திரைப்படங்களில் நடித்து சிரிக்க வைத்தார். அவர் நடித்த, 100 படங்களுமே அவர் நடத்தும் பாடங்கள் தான்!


புதிய வீடியோ