/ கட்டுரைகள் / கழிவறைப் புரட்சி

₹ 130

கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து, 42 தலைப்புகளில் உணர்த்தும் நுால். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்கும் தடைச் சட்டத்தால் ஏற்பட்ட நன்மை குறித்து பேசுகிறது. கழிப்பறையின் அவசியம் குறித்து உணர்த்திய, மீள், கக்கூஸ், டாய்லெட், ஏக் பிரேம் கதா, ஜோக்கர் போன்ற சினிமாக்கள் பரப்பிய கருத்தை கண்முன் நிறுத்துகிறது.ஜப்பானிய குந்து கழிப்பறை, கழிப்பறைக்காக தற்கொலை செய்த பெண், மாமனார் மீது மருமகள் புகார், தந்தை மீது சிறுமி புகார், கழிப்பறை கட்டாத அரசு அதிகாரிகள் பணி நீக்க உத்தரவு, ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிய மூதாட்டி, கழிப்பறை கல்லுாரி என விரிந்துள்ளது.நவீன கழிப்பறை கட்டமைப்புகள், உலர், பயோ கழிப்பறை தண்ணீரை சிக்கனப்படுத்தும் கழிப்பறை, மறு சுழற்சி முறை, உரமாவது என, கழிப்பறையை வடிவமைப்பது, பயன்படுத்துவது என விரிவாக பாடம் கற்பிக்கிறது. அனைத்து தரப்பினரும் வாசிக்க வேண்டிய நுால்.– டி.எஸ்.ராயன்


புதிய வீடியோ